இந்தியாவில் கோவிட் சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் கோவிட் தொற்றால் மரணமடையும் மக்களது சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விறகுகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு டெல்லி நகர முதல்வர் ஜெய்பிரகாஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லிக்கு அருகில் உள்ள வனங்களில் இருந்து அவசரகால ரீதியில் விறகுகள் வெட்டப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்படுகின்றன. 24 மணிநேரமும் உடல்கள் குவிவது வேதனையளிப்பதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை சமாளிக்க நாய்களைத் தகனம் செய்யும் இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய டெல்லி அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

Previous articleதினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?
Next articleதொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கப்படும்!