தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கப்படும்!

கோவிட் வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

ஆனால், கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோவிட் வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும்.இதனால் நாட்டை முடக்காது கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கும்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் ஏற்படக்கூடிய இடப்பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு இராணுவத்தால் 1500 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்தியாவில் கோவிட் சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு!
Next articleஇந்தியாவில் மணிக்கு 180 கோவிட் மரணங்கள் : உலகில் ஆபத்தான நிலையில் இந்தியா