உலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,84 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,10,98,853 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,84,25,203 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 78 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 19,495,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,622 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Previous articleஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி. ஆனந்த் திடீர் மரணம்!
Next articleயாழில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்!