யாழில் பெருமதியான கஞ்சா கடற்படையினரால் தீயிட்டு எரிப்பு!

யாழ்ப்பாணம், சில்லாலை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், 240 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபா 72 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (28), வடக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையிலேயே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த 240.95 கிலோகிராம் கஞ்சா ஆனது, 105 பொதிகளில் பொதி செய்யப்பட்டு, 7 பைகளில் அடைக்கப்பட்டு, இறால் வளர்ப்பு பண்ணையினுள் சூட்சுமமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக, கடற்படை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான அனைத்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினர் தீ வைத்து அழிக்க நடவடிக்கை எடுத்ததாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Previous articleபொலிஸ் நிலையத்தின் முன் குழந்தைகளுடன் தவிர்த்த தாய் – காரணம்?
Next articleகொரோனா நோயாளி யன்னல் வழியாக குதித்து தற்கொலை!