கொரோனா நோயாளி யன்னல் வழியாக குதித்து தற்கொலை!

இந்தியாவின் சண்டிகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 வயதான ஒருவர் இன்று மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டு, கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா சிகிச்சையில் இருந்த குறித்த
நபர் சுவாச தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை முடிந்து, நேற்று ஒரு தனியார் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் நோயாளி தனது அறையின் ஜன்னலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது குறித்த மரணம் தொடர்பில் சண்டிகர் போலீசார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleயாழில் பெருமதியான கஞ்சா கடற்படையினரால் தீயிட்டு எரிப்பு!
Next articleஇன்றைய ராசிபலன் – 30.04.2021