கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் மாமன் தாக்கியதில் மருமகன் பலி!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய குடும்பத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனார் தாக்கியதில் படுகாயமடைந்த மருமகன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய பெருமாள் ரவிச்சந்திரன் என பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் வடமராட்சியில் மண் கடத்தல்காரர்கள் மீது கடற்படை துப்ப்பாக்கி சூடு!
Next articleமுல்லைத்தீவில் பரபரப்பு; தாக்குதல் நடந்த வந்தவர்களை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!