முல்லைத்தீவில் பரபரப்பு; தாக்குதல் நடந்த வந்தவர்களை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் வசமாக மாட்டிக் கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த நிலையில் வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து ஊர்மக்களை அழைத்தபோது இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மூவரிடமும் விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சி தருமபுரம் பகுதியில் மாமன் தாக்கியதில் மருமகன் பலி!
Next articleஇஸ்ரேலில் நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் பலி!