களுத்துறை சிறைச்சாலையில் மேலும் 32 கைதிகளுக்கு கொரோனா!

களுத்துறை- ஜாவத்த சிறைச்சாலையிலுள்ள 32 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே குறித்த 32பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலையின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மற்றுமொரு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇஸ்ரேலில் நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் பலி!
Next articleகிளிநொச்சி வைத்தியசாலையில் இறந்த கோழிகளை வீசிச் சென்ற பெண்!