கிளிநொச்சி வைத்தியசாலையில் இறந்த கோழிகளை வீசிச் சென்ற பெண்!

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குள்  நான்கு  இறந்த கோழிகளுடன்  சென்ற  பெண்ணொருவர்  அக் கோழிகளை அங்கு வீசி விட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அப்பகுதியில் வசித்து வருவதாகவும் சம்பவ தினத்தன்று அங்கிருந்த வைத்தியசாலைப் பணியாளர்களைப் பார்த்து ”நீங்கள் வளர்க்கும் நாய்கள்தான் எனது கோழிகளைப் பிடித்து கொன்றுவிட்டது” எனக் கோபத்துடன் கூறிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், இதனை மறுத்த பணியாளர்கள்” வைத்தியசாலையில் நாய்களை வளர்ப்பதில்லை எனவும் தெரு நாய்களே குறித்த கோழிகளைப்   பிடித்ததாகவும் தெரிவித்துள்ளளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் இதுவரை  எவ்வித நடவடிக்கையையும்  எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்

Previous articleகளுத்துறை சிறைச்சாலையில் மேலும் 32 கைதிகளுக்கு கொரோனா!
Next articleஇலங்கையில் காற்றில் பரவும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை