இலங்கையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு இரு வாரங்கள் தடை!

இலங்கையில் திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இருவாரங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும். மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இரண்டு வாரங்கள் உடனடியாக தடை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கோவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் காற்றில் பரவும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை
Next articleமகிந்த ராஜபக்சவுக்கு அரச நிர்வாகத்தில் அதிகமான பொறுப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!