சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும்!

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே கருத்து வெளியிடுகையில்,

“இது ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புதிய மாறுபாட்டைக் கொண்ட அறிகுறிகளின் நோயாளிகளின் எண்ணிக்கை நாடு இதுவரை கண்டதை விட அதிகமாக உள்ளது என அந்த சங்கத்தின் துணை இயக்குநர் வைத்தியர் எஸ்.எம்.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

“தேவையற்ற முறையில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறினால், நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த கட்டாயப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் நோய் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் வேகமாக கோவிட் தொற்று பரவி வரும் நிலையில், பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமகிந்த ராஜபக்சவுக்கு அரச நிர்வாகத்தில் அதிகமான பொறுப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
Next articleகொரோனா தடுப்பூசியில் மிகப்பெரிய முறைகேடு!