இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 922 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.
