இந்தியாவில் மின்சார வயரால் குளத்திற்குள் பறிபோன இரு உயிர்!

இந்தியாவில் மதுக்கரை வழுக்குப்பாறை அருகில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற இருவர் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த ராசு மற்றும் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மல்லிகா
என்ற இருவருமே வேலையை முடித்துக்கொண்டு, குளத்தில் மீன் பிடிக்க சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளனர்.

முதலில் குளத்தில் இறங்கிய ராசு குளத்தில் அறுந்து கிடந்த மின்வயரை கவனிக்காததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்று தெரியாமல் ராசுவை காப்பாற்ற சென்ற மல்லிகாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாம் இலங்கைப் பிரஜையா? சீனப் பிரஜையா? இம்ரான் எம்.பி கேள்வி
Next articleகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமியை தேடும் குடும்பம்!