கனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமியை தேடும் குடும்பம்!

கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி 29ஆம் திகதி மதியம் 1 மணிக்கு காணாமல் போயிருக்கிறார்.

Advertisement

அவர் தப்ஸ்கோட் சாலை மற்றும் மெக்லிவன் அவென்யூ பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

தரணிதா ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இடது கையில் டாட்டூ குத்தியிருக்கும் தரணிதா காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.