முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (29) மாலை முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் வர்த்தக நிலையங்கள் மூன்று எரிந்தழிந்திருந்தன.
வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த செ.அரிராசசிங்கம் (வயது 72) என்பவர் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.