நேற்றய தினம் 11 கொரொனா மரணங்கள்!

FILE PHOTO: A health worker and relatives wearing personal protective equipment (PPE) carry the body of a man, who died due to the coronavirus disease (COVID-19), for his cremation, at a crematorium in New Delhi, India August 17, 2020. REUTERS/Adnan Abidi/File Photo

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு 5 பெண்களுகம் 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இறுதியாக பதிவான மரணங்கள்,

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரும்

தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும்

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரும்,

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும்,

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஆணொருவரும், திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண்ணொருவரும்

பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவரும்

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும்

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயதுடைய ஆணொருவரும்

பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும்

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரும் இறுதியாக கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 120 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 975 பேர் குணமடைந்துள்ள போதிலும் , 10 764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleதிருகோணமலையில் சக பணியாளர் தள்ளிவிட்டதில் உயிரிழந்த 21 வயது இளைஞர்!
Next articleசர்வதேச தொழிலாளர் தினம் : புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை