இந்தியாவில் நேற்றைய கொரோனா பரவல் விபரம்!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் 402,110 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,157,094 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகஙக்ள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதேபோல், கடந்த 24 மணித்தியாலங்களில் 3,522 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleசர்வதேச தொழிலாளர் தினம் : புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை
Next articleகொரோனாவால் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய நடிகர்