கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவின், நாம்பமுனுவ மற்றும் கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின், கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின், தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவின், தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தின், கலவானை பொலிஸ் பிரிவின், ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇலங்கையில் தீடிரென இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்பு!
Next articleஇலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று!