இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று!

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருக்கின்றார்.

எண்டி புட்டி மவுத் டிசிஸ் என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Previous articleகொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
Next articleயாழ் புலோலி மேற்கு பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் அதிரடியாக தனிமைப்படுத்தலில்!