மேலும் ஒருவாரம் பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்று முன்னர் விடுத்துள்ளார்.

நாளை மறுதினத்துடன் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் தொடங்குவதா என்பது தொடர்பில் 07 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் – தொற்றுதியானவர் வீட்டிலேயே இறந்த பரிதாபம்
Next articleகொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்