கோவிட் தொற்றுக்கு இலக்காகிய இருவர் மட்டக்களப்பில் உயிரிழப்பு!

Health workers wearing personal protective equipment carry the body of a COVID-19 victim for cremation in Gauhati, India, Thursday, Sept. 10, 2020. India is now second in the world with the number of reported coronavirus infections with over 5.1 million cases, behind only the United States. Its death toll of only 83,000 in a country of 1.3 billion people, however, is raising questions about the way it counts fatalities from COVID-19. (AP Photo/Anupam Nath)

மட்டக்களப்பில் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுக்கு இலக்கான ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 57 வயதுடைய கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருவதுடன், அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கரடியனாறு கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலையை சேர்ந்த ஆண் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleயாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு நடைபெறுமா?
Next articleமாறிய சடலங்களால் வைத்தியசாலையில் பதற்றம்!