இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் 4,01, 993 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,91,64, 969 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று, ஒரே நாளில் 3523 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,853 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 1,56,84, 406பேர், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 32,68,710 பேர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous articleமன்னார் மாவட்டத்தில் மேலும் 5 கொரேனா தொற்றாளர்கள்!
Next articleஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை