ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Previous articleஇந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா!
Next articleஇன்றும் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!