கிளிநொச்சி மாவட்டம், தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து புளியம்பொக்கணை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 1044 லீற்றர் கோடாவும் 88 லீற்றர் கசிப்பும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை 02.05.2021 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.