ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் (Bull-e-Alam)பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் குறித்த கார் குண்டுவெடிப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.