கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தற்சமயம் விளையாடி வரும் அஸ்வின் தற்போது இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். போட்;டிகளில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி சார்பில் விளையாடி வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

கொரோனா வைரஸிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பரிதாப பலி!
Next articleயாழில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா!