நேற்றயதினம் மேலும் 9 கொரொனா மரணங்கள் பதிவாகின!

இலங்கையில் கொரோனா தொற்று பலியெடுப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆண்கள் எண்மர் உட்பட மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் தகவலை அடிப்படையாக கொண்டு அரசாங்க தகவல் திணைக்களம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-28 அன்று உயிரிழந்துள்ளார்.

கரந்தன பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-29 அன்று உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

தேவாலகம பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான பெண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

யக்வில பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர் கடந்த ஏப்-30 அன்று உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான ஆண் ஒருவர் நேற்று மே-01 அன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா!
Next articleகொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் தற்கொலை!