முள்ளியவளையில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை , தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த குறித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை காவற்துறையினர் குறித்த கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று தகர்த்தளிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்

இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்ற வேளை இன்னுமொரு குண்டும் இருப்பது காவற்துறையினரால் இன்று இனம்காணப்பட்டுள்ளது

மக்கள் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது வெடிபொருட்கள் அகற்றியதாக தெரிவிக்கப்பட்ட குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அண்மையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் 10 ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Previous articleகொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் தற்கொலை!
Next articleஇலங்கையில் நேற்றயதினம் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!