இலங்கையில் நேற்றயதினம் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 845ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 503 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 96 ஆயிரத்து 478 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 678 பேர் மரணித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 689 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுள்ளியவளையில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்கள்!
Next articleசென்னையை வீழ்த்தியது மும்பை!