கனடாவில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 35 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

அங்கு மொத்தமாக இதுவரை 24 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.