கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை முடக்கம்!

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நீலதண்டாஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Previous articleகனடாவில் 12 இலட்சத்து 27 ஆயிரத்து 35 பேர் கொரோனாவால் பாதிப்பு!
Next articleகொட்டகலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!