தென்னிலங்கையில் கொழும்பிலும், வடக்கில் யாழ்ப்பாணத்திலும் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று கோவிட் தொற்றுக்குள்ளான 1,716 பேரில், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவார்.

கோவிட் தொற்று தொடர்பான நாளாந்த அறிக்கையை கோவிட்19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டு வருகிறது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 375 பேருக்கு நேற்று தொற்றுக்குள்ளாகி உள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 247 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 158 பேருக்கும், காலி மாவட்டத்தில் 138 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 108 பேருக்கும், கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா 84 பேருக்கும் தொற்றுறுதியாகி உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 82 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 70 பேருக்கும், மொனராகலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 56 பேருக்கும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 33 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 19 பேருக்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 12 பேருக்கும், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 09 பேருக்கும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 05 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 04 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 02 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleகாதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 22 வயது இளம்யுவதி!
Next articleஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படவிருந்த இலங்கைத் தமிழன் மரணமானது ஏன்?