யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(02) சற்றுமுன்னர் கடும் மழை பெய்துள்ளது.
இன்று பிற்பகல்-01. 45 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக குறித்த மழை வீழ்ச்சி நீடித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் யாழின் பல பகுதிகளிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக கடும் மழை நீடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.