யாழ் அரியாலையில் இன்று இரத்ததான முகாம்!

அரியாலை ஞானதீபம் அமைதிகள் இளையோர் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(02) காலை-09 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை பண்ணை வளவு, அரியாலையில் உள்ள மேற்படி திறன் விருத்தி மைய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக 0772299346 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் சற்றுமுன்னர் மீண்டும் கடும் மழை!
Next articleமுல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசங்கள் முடக்கம்!