கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நிரம்பி வழியும் நோயாளர்கள்!

காலி – கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு (01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.

இதனால் அந்த வைத்தியசாலையின் மேலும் இரு வாட்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கே.எச்.ஜி.ஜிவரதன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 36ஆம் இலக்க வாட்டில் 55 தொற்றாளர்கள் காணப்பட்ட நிலையில், இதனைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக 46, 25ஆம் இலக்க வாட்கள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக அக்மிமன மெலிபன் வைத்தியசாலையும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleமுல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசங்கள் முடக்கம்!
Next articleதமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் ஸ்டாலின்!