தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் ஸ்டாலின்!

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வரையிலான முடிவுகளின் படி 130இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க முன்னணி வகிக்கிறது.

பத்து வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.

இதன்படி தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களின் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மலர்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதேவேளை, தி,மு.க சார்பில் போட்டியிட்ட ஸ்டாலினின் மகனும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை விட அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

Previous articleகராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நிரம்பி வழியும் நோயாளர்கள்!
Next articleஐந்து மாநிலங்களில் மூன்றில் மோடி தலைமையிலான பாஜக படுதோல்வி