கடந்த மாதம் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் அதற்கான முடிவுகள் தற்பொழுது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதேவேளை இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி புதுச்சேரி மற்றும் அசாமில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
எனினும் ஏனைய மூன்று மாநிலங்களில் பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தனது ஆதிக்கத்தை இழந்துள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் திணாமுல் காங்கிரசும், கேரளாவில் சி.பி.எம் உம் முன்னிலை வகிக்கின்றன.
அத்துடன் தமிழகத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குறித்த தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்டவும் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பகுதியளவான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.