தம்மிக்க பாணி கோவிட் வைரஸூக்கு உகந்தது அல்ல!

கேகாலை ஹெட்டிமுல்ல பத்ரகாளியம்மன் கோயில் பூசகர் தயாரித்த தம்மிக பாணி மருந்து கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என இரசாயன பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழைகத்தின் மருத்துவப் பீடத்தினரால் சுகாதார அமைச்சர் ஆலோசனையின் பேரில் இந்த இரசாயன பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 68 கோவிட் நோயாளிகளுக்கு இந்த பாணி மருந்து வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல் நலனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் மருத்துவர் சேனக்க பிலபிட்டிய கூறியுள்ளார்.

வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் கோவிட் நோயாளிகளுக்கு இந்த பாணி மருந்தை வழங்கி சிகிச்சையளித்த போது 100 வீத பிரதிபலன் கிடைத்ததாக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஐந்து மாநிலங்களில் மூன்றில் மோடி தலைமையிலான பாஜக படுதோல்வி
Next articleயாழில் 12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணம்!