உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

மே 5 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் அதன் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, கணக்கிடப்பட்ட Zscores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.

அந்த நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டெம்ர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.

மேலும் பரீட்சை முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்பவற்றில் பார்வையிடலாம் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous articleயாழில் 12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணம்!
Next articleகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!