கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!
Next articleஇன்றும் 1228 பேருக்கு கொரோனா!