யாழ் வரணி சந்தைப் பகுதியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் வரணி சந்தைப் பகுதியில் இரண்டு குழுக்கள் வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சற்று முன்னர் வரணி சந்தைப் பகுதியில் குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வாள்வெட்டில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவரை மீட்டு சாவகச்சேரி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.