நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்!

இலங்கையில் மேலும் 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,843 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 687 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் வரணி சந்தைப் பகுதியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் – ஒருவர் காயம்
Next articleசிறைச்சாலை கொத்தணியில் 246 தொற்றாளர்கள்!