ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை!

‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறைச்சாலை கொத்தணியில் 246 தொற்றாளர்கள்!
Next articleதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா – (வீடியோ)