அபார வெற்றியை நோக்கி தி.மு.க. – மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததுடன் தற்போது குறித்த கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போதைய நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கூட்டணியில், தி.மு.க. 124 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் ம.தி.மு.க. நான்கு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களிலும் ஏனைய கட்சிகள் எட்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 77 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதில், அ.தி.மு.க. 68 இடங்களிலும், பா.ம.க. நான்கு இடங்களிலும் பா.ஜ.க. நான்கு இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று பிற்பகல் வரை ஒரு இடத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அந்தக் கட்சி முன்னிலையில் இருந்தபோதும் தற்போதைய நிலைவரப்படி அந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுகிறது.

Previous articleஇலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஏற்பாடு!
Next articleஇன்று 2000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!