இன்று 2000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 764 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 97 ஆயிரத்து 242 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 687 பேர் மரணித்துள்ளதுடன் 13 ஆயிரத்து 776 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅபார வெற்றியை நோக்கி தி.மு.க. – மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது
Next articleஅமெரிக்காவில் மனிதக்கடத்தல் ஒரே வீட்டில் 91 பேர் மீட்பு!