கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது வரையிலான முடிவுகளின் படி 130இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க முன்னணி வகிக்கின்றது.
பத்து வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் ,ஆகியோர் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் அரசியல் வெளியிலும்,பொது வெளியிலும் காணவில்லையென கட்சியின் மூத்த நிர்வாகிகள்,தொண்டர்கள் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனோடு மூத்த அமைச்சர்கள் பலரையும் தொண்டர்கள் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் தி.மு.க மூன்றில் இரண்டு பெரும்பாண்மையில் வெற்றிப்பெற்றிருக்கும் நிலையில் இவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளமை தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.