உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி, இதுவரை உலகம் முழுவதும் தற்போது 15 கோடியே 34 இலட்சத்து 78 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 7 இலட்சத்து 90 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 இலட்சத்து 16 ஆயிரத்து 128 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு தற்போது ஒரு கோடியே 94 இலட்சத்து 71 ஆயிரத்து 713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.