ஏ9 வீதி புத்துார் சந்தியில் ஈருருளியில் வந்தவரை மோதித் தள்ளிய மகிழுந்து!

A9 வீதி புத்தூர்ச்சந்தியில் மகிழூந்து மற்றும் ஈருருளி விபத்திற்குள்ளாகி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மந்துவில் கிழக்கைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கவரே ஈருருளியில் வரும் போது வேகமாக வந்த மகிழூந்து மோதி தள்ளியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியது!
Next articleசிலாவத்துறையில் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய மன்னார் பாடசாலை அதிபர்!