ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார்.

எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவார்

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலையில் 125 இடங்களில் தி.முக. வென்றுள்ளது

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வரும் ஏழாம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!
Next articleஇன்றும் 1046 பேருக்கு கொரோனா!