இலங்கையை வந்தடைகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik v) கொரோனா தடுப்பூசியின் 15 ஆயிரம் டொஸ் இலங்கையை வந்தடையவுள்ளது.

குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து பெறப்படவுள்ள தடுப்பூசிகளின் முதற்கட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றும் 1046 பேருக்கு கொரோனா!
Next articleகொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரிப்பு – படுக்கைகளுக்குப் பற்றாக்குறை